ஸ்ரீஜயவர்தன வைத்தியசாலைக்கு மாற்றப்படும் துமிந்த!

343 0

downloadமரண தண்டனை கைதி துமிந்த சில்வாவை வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து ஸ்ரீஜயவர்தன வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

துமிந்த சில்வா தற்போது வரையில் சிறைச்சாலை வைத்தியசாலையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார்.சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து இன்று ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துமிந்த சில்வாவை அவ்வாறு மாற்றுவதற்கு அவசியமான அனைத்து வைத்திய அறிக்கைகளும் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரன் கொலை சம்பவத்தில் குற்றவாளியான துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.