கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த உதவும் வகையில், ஒரே பயணித்தின்போது தாங்கள் கொண்டு செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை இரண்டாக குறைக்குமாறு சகல முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் முச்சக்கர வண்டி சாரதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுகக வேண்டும் என்றும் இலங்கை சுயதொழில் வல்லுநர்கள் தேசிய முச்சக்கர வண்டி சம்மேளனத்தின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

