தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தகுதி பெற்றவர்களின் பெயர்ப்பட்டியல் அரச நிர்வாக இணையத்தளத்தில் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது.
நியமனக்கடிதம் கிடைக்கப்பெற்று 3 நாட்களுக்குள் இவர்கள் தமது பிரதேச செயலாளர் பிரிவிற்கு சமூகமளிக்க வேண்டும் என நியமனக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டடிருந்தது.
எனினும் நியமனக்கடிதம் கிடைக்கப்பெறாதோர் இது தொடர்பாக எந்தவித சந்தேகத்தையும் ஏற்படுத்திக்கொள்ளத்தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல கடிதம் கிடைக்கப்பெற்ற 7 நாட்களுக்கு பயிற்சிக்கு சமூகமளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும் இது தற்பொழுது நடைமுறையில் இல்லை எனவும் கூறப்படுகிறது.
தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அமைய பொதுத்தேர்தல் நிறைவடைந்து 5 நாட்களுக்கு பின்னர் அதாவது, எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாவுள்ளது.
பட்டதாரிகள் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிவித்திருந்தார்.
அதன்படியே பட்டதாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அரச நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

