புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் தீ

303 0

புறக்கோட்டை, முதலாம் குறுக்குத் தெருவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று (11) மதியம் தீ பரவியுள்ளது.

நான்கு மாடி கட்டடமொன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயை கட்டுப்படுத்துவதற்காக 6 தீயணைப்பு வாகனங்களை அங்கு அனுப்பியுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது