பதவிக் காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை

318 0

கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழு, ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. எதிர்வரும் 22 ஆம் திகதியுடன் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நிறைவடையுவுள்ளது.

தமது கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதியின் பதில் விரைவில் கிடைக்கும் என ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.