அனுராதபுரம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணிடம் இருந்து துப்பாக்கி ஒன்றும் மற்றும் போரா 12 வகை தோட்டக்கள் 12 உம் கைப்பற்றப்பட்டுள்ளது.சந்தேக நபரான பெண் மேலதிக விசாரணைகளுக்காக அனுராதபுரம் பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

