தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

314 0

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ்பிரிவு தோட்ட வீட்டின் நீர் நிறப்பி வைத்திருக்கும் அறை ஒன்றில் இருந்து தூங்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (04) மாலை 03 மணி அளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் எவரும் இல்லாத வேலை குறித்த இளைஞன் தனது வீட்டின் சமையலரைக்கு அருகாமையில் உள்ள நீர் நிறப்பி வைக்கபட்டிருக்கும் அறையில் தனது தாயின் சேலையால் தூக்கில் தொங்கியதாகவும் குறித்த இளைஞனின் சகோதரன் பாடசாலை விட்டு வீடு வந்து பார்த்த போது தூக்கில் தொங்கியதை கண்டு குச்சலிட்டதை அடுத்தே பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 18 வயதுடைய சசிகுமார் பிரதாப் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கொழும்பில் ஆறுமாத காலம் தொழிபுரிந்து தற்பொழுது வீட்டில் இருந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சடலம் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த இளைஞன் உயிரழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டரியப்படவில்லை என தெரிவித்த பொகவந்தலாவ பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.