எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தரப்பினர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் கூட்டணியை அமைத்துள்ள நிலையில் ; ரணில் தரப்பினர் தாம் யானைச் சின்னத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கின்றனர். இதன்மூலம் ஐக்கிய தேசியக் கட்சியானது எதிர்வரும் பாராளு மன்றத் தேர்தலில் இரண்டாகப் பிளவடைந்து செல்வதற்கான சாத்தியம் அதிகரித்திருப்பதாக ;தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்க்கட்சித்தலைவர் சஜித் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டணியின் புரிந்துணர்வு கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று கொழும்பில் நடைபெற்றது.இதில் சஜித் தரப்புடன் இணைந்து போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்துகொண்டு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன.
இதேவேளை ;ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையாகமான சிறிகொத்தாவில் நேற்றையதினம் ;ஊடகவியலாளர் மாநாட்டை நடத்திய ஐக்கிய தேசியககட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க பாலித்த ரங்கே பண்டார ஆகியோர் ஐக்கிய தேசியக்கட்சி யானை சின்னத்தில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்தனர். அத்துடன் ;ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக வேட்புமனு சபையொன்று& ;உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அறிவித்தனர்.
இந்த நிலையிலேயே ; ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாகப் பிளவடையும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தல் தோல்வியின் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சியின் ;சஜித் மற்றும் ரணில் தரப்பினர் ஒரு பொதுவான கூட்டணியை அமைத்து ;தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ; ஆராய்ந்து வந்தனர். இதன்போது ; பொது கூட்டணி ஒன்றை அமைத்து அதில் ; சஜித் பிரேமதாசவை பிரதமராக களமிறக்கவும் அந்த கூட்டணியின் தலைவராக ; சஜத்தை நியமிக்கவும் ;தீர்மானிக்கப்பட்டது. எனினும் பொதுக்கூட்டணி அமைத்த பின்னர் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டது.
ஐக்கிய தேசியக்கட்சியின் ரணில் தரப்பினர் யானை சின்னத்திலேயே ; போட்டியிட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருந்து வந்தனர். எனினும் சஜித் தரப்பினர் அன்னம் சின்னம் அல்லது வேறு ஏதாவது ஒரு சின்னம் தொடர்பில் வலியுறுத்திவந்தனர். இந்த நிலையிலேயே ;இரண்டு தரப்பினரும் ஒரு கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் பாரிய சர்ச்சை நிலைமை நீடித்து வந்தது. இது தொடர்பில் இரண்டு தரப்பிற்குமிடையில் பல்வேறு பேச்சுவார்த்தைகள் ;இடம்பெற்றபோதிலும் அவை எவற்றிலும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை. ; இந்த சூழலில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஐக்கியதேசியக்கட்சியின் விசேட ; செயற்குழுக்கூட்டம் இடம்பெற்றது ; அதன்போது சின்னம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. எனினும் ; செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற ரணில் தரப்பு பிரதிநிதிகள் ;யானை சின்னத்திலேயே போட்டியிடவேண்டுமென ;உறுதியாக தெரிவித்திருந்தனர். ஆனால் சஜித் தரப்பினர் அதனை ஏற்க மறுத்திருக்கின்றனர். இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செயற்குழு கூட்டமும் எந்தவிதமான ;இணக்கப்பாடுமின்றி ; நிறைவடைந்தது.
அதன்பின்னரே ரணில் தரப்பினர் தாம் யானை சின்னத்தில் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தனர். ; அதன்படி தற்போது ஐக்கிய ; தேசியக்கட்சியானது இரண்டாகப் பிளவடையும் அபாயத்தை கொண்டிருப்பதாகவே தெரிகின்றது. எனினும் ; சஜித் தரப்பினரும் ரணில் தரப்பினரும் இணைந்து போட்டியிடுவதற்கு இன்னும் அவகாசம் இருப்பதாகவும் அதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகவும் சிலர் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் சின்னம் விடயத்தில் இரண்டு தரப்பினருமே விட்டுக்கொடுக்க தயார் இல்லை என்பதால் ;கட்சியானது ; இரண்டாகப் பிரிந்து தேர்தலில் போட்டியிடும் சாத்தியமே அதிகம் இருப்பதாகவும் ;தெரிவிக்கப்படுகின்றது.

