கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இலங்கையர் ஒருவர் இத்தாலியில் அடையாளம் காணப்பட்டுள்ளார்!

305 0

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இலங்கையர் ஒருவர் இத்தாலியில் அடையாளம் காணப்பட்டுள்ளார் என இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இத்தாலியில் ப்ரெசியாவில் வசிக்கும் 46 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் இலங்கையர் இவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இத்தாலியில் இதுவரை 2036 பேர் கொரோனா வைரஸ் ;தொற்றுக்குள்ளாகியுள்ளதோடு, 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் 30 பேர் இந்நோய் தொற்றிலிருந்து மீட்டுள்ளனர்.