மன்னாரில் மீட்கப்பட்ட வெடி பொருட்கள்!

348 0

மன்னாரில் இரு இடங்களில் இராணுவத்தினரால் வெடி பொருட்கள் மற்றும் வெடி மருந்துகள் மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் சௌத்பார் கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கிலோ வெடி மருந்து மற்றும் அதற்கு பயன்படுத்தும் 27 குச்சுகளும் நேற்று திங்கட்கிழமை மாலை இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் குறித்த பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது குறித்த வெடி மருந்து மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட வெடி மருந்து மற்றும் குச்சுகள் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதே, வேளை மன்னார் பள்ளிமுனை கோந்தை பிட்டி கடற்கரையோர பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை சக்தி வாய்ந்த வெடி பொருள் ஒன்றை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

அப்பகுதியில் உள்ள பற்றை ஒன்றிலிருந்து குறித்த வெடி பொருளை மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.