வரவு செலவு திட்டம் – முதற் தடவையாக மக்களின் கருத்துக்கள் பெறப்படும்

288 0

41860283bbb2சுதந்திர இலங்கையின் 70வது வரவு செலவு திட்டம் இன்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டது.

இந்த வரவு செலவு திட்டமானது நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவு திட்டமாகும்.

வரவு செலவு திட்டம் சமர்பிப்பின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தார்.

இதன்போதுஇ கருத்து தெரிவித்த நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அடுத்த வருடத்தில் 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைவதே அரசாங்கத்தின் நோக்கம் என குறிப்பிட்டார்.

அத்துடன் இந்த முறை வரவு செலவு திட்டத்திற்கு வரலாற்றில் முதல் தடவையாக மக்களின் கருத்துக்கள் பெறப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

விவாயத்துக்கு முன்னுரிமை வழங்கி வரவு செலவு திட்டம் முன்வைக்கப்படுவதாக தெரிவித்த நிதியமைச்சர்இ பழங்கள் மற்றும் மரக்கறி உற்பத்திதுறை மேம்படுத்துவதற்கு 50 சதவீத கடன் வட்டி நிவாரணம் வழங்கவுள்ளதாக குறிப்பிட்டார்..

அந்த நிவாரணத்தை நெற் பயிர் செய்கையாளர்களுக்காக விஸ்தரிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் நோக்கில் இறக்குமதி செய்யப்படுகின்ற சீனிக்கான செஸ் வரி 2 சதவீதத்தாலும் எத்தனோலுக்கான செஸ் வரி 5 சதவீதத்தால் அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 15 ஆயிரம் கறவை பசுக்களை இறக்குமதி செய்யப்படவுள்ளன

இதேவேளைஇ பெருந்தோட்ட நிறுவனங்களுக்கான காணிகள் 5 ஆயிரம் ஏக்கராக மட்டுப்படுத்தப்படவுள்ளது.

தேயிலை உற்பத்திதுறைக்கான வரிகள் குறைக்கப்படவுள்ளன.

உற்பத்திதுறை அபிவிருத்திக்கான 900 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளைஇ உள்நாட்டு பாலுற்பத்தித்துறை மேம்படுத்தும் நோக்கில் இறக்குமதி செய்யப்படுகின்ற பால் மாவிற்கான விலை அவ்வாறே பேணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளைஇ கோழி இறைச்சிக்கான சில்லறை விலை மேலும் குறைக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறையை அபிவிருத்தி செய்ய மேலதிகமாக 17இ840 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

5 வயது முதல் 19 வயது வரையான சகல பாடசாலை மாணவர்களுக்கும் இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான இலவச காப்புறுதி வழங்கப்படும்.

அனைத்து மாணவர்களுக்கும் சேமிப்புக் கணக்கு ஆரம்பித்துக் கொடுக்கப்படும்.
ஸ்மாட்; வகுப்பறைகளுக்காக 500 பில்லியன் ஒதுக்கப்படும்.
உயர்தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அடுத்த வருடம் முதல் இலவச டெப் வழங்கப்படும்.

ஒரு லட்சத்து 75 ஆயிரம் மாணவர்களுக்கும் உயர்தரம் கற்பிக்கும் 28 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் இவ்வாறு டெப் வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு கல்வியை பெறும் மாணவர்களுக்கான நாளாந்த கொடுப்பனவு 50 ரூபாவிலிருந்து 150 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டளவில் பல்கலைகழகம் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்களை இணைத்து கொள்ளும் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அரச பல்கலைக்கழகங்களுக்கான மாணவர் தொகை 50 ஆயிரமாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பல்கலைகழக அனுமதியை தவறவிட்ட 15 ஆயிரம் மாணவர்களுக்கு 8 லட்சம் ரூபா வரையிலான கடன் திட்டம்.

கல்வியின் தரத்தை ஆய்வு செய்வதற்கான சபை ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக தெரிவித்த நிதியமைச்சர் உயர்கல்வியை விரிவுப்படுத்துவதற்கு தனியார் துறையின் பங்களிப்பை பெற்று கொண்டு அரசசார்பற்ற பட்டக்கல்வி நிறுவனங்களை உருவாக்குவதற்கு வாய்பளிக்கப்படும் என குறிப்பிட்டார்.

சகல மருந்தகங்களும் தேசிய ஒளடத அதிகார சபையில் பதிவு செய்யபர்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற்று வெளியேறுகின்ற ஒவ்வொரு நோயாளருக்கும் தமது சிகிச்சைக்கான செலவு தொடர்பான பற்றுச்சீட்டு வழங்கப்படவுள்ளதாக யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டிகளுக்கு பதிலாக நான்கு சில்லு மின்சார சிற்றூர்ந்துகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
இதன்பொருட்டு 200 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டார்.

திருகோணமலை நீர் தீட்ட அபிவிருத்திக்கு 600 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொடரூந்து பயணங்களுக்கு முன்கூட்டிய கொடுப்பனவு அட்டைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பத்தின் பொருட்டு ஆயிரத்து 306 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடற்றெழில்துறை அபிவிருத்திக்கு ஆயிரத்து 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்களுக்காக ஈ.விஸா அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இணைய மூலமான பரிமாற்றங்களுக்கு வரி அறவிடப்படவுள்ளது.

முதலீட்டு துறை அபிவிருத்தியின் பொருட்டு 20 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பு ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

வடக்கு கிழக்கு வீடமைப்பு அபிவிருத்தியின் பொருட்டு 5 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் 50 ஆயிரம் வீடுகளும், பெருந்தோட்ட துறையில் 25 ஆயிரம் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவுள்ளன.

லயன்முறைகளை ஒழிப்பதே இதன் நோக்கம்.

இதற்கான இடங்கள் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

மத்திய தர வருமானத்தை ஈட்டும் குடும்பங்களுக்கு 5 லட்சம் வீடுகளை அமைத்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கேகாலை மற்றும் பதுளை மாவட்டங்களில் பெருந்தோட்ட பாடசாலை அபிவிருத்திக்காக 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தனியார் பேருந்துகள் இரவு 11 மணிவரையில் சேவையில் ஈடுபட இணக்கம் வெளியிட்டுள்ளன.

அத்துடன், கடைகளும் இரவு 11 மணி வரையில் திறந்திருக்கும்.

சமூர்த்தி திட்டம் ஜன இசுறு என அழைக்கப்பட யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அக்ரகார காப்புறுதி திட்டத்தை வாழ்நாள் முழுவதும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை போதைபொருள் ஒழிப்பு பிரிவுக்கு 150 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு நல்லிணக்கத்தின் பொருட்டு 180 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சட்டத்துறையில் மாற்றங்களைக் கொண்டுவர முன்வருமாறு, பிரதம நீதியரசர் உள்ளிட்ட சட்ட சமூகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளளதாக நிதியமைச்சர் பாதீட்டு உரையின் போது தெரிவித்தார்.

இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரையான காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவதற்கான கட்டணம் 50 ரூபாவால் குறைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மாவிற்கான சுங்க வரி 100 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.