மாவா எனும் போதைப்பொருளுடன் இருவர் கைது

326 0
தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மாவா எனும் போதைப்பொருள் 3 கிலோ 875 கிராமுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (24) இரவு 7.30 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

21 மற்றும் 49 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தெஹிவளை மற்றும் மத்துகம பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.