வல்லை – அராலி வீதியின் அச்சுவேலி, தென்மூலை பகுதியில், நேற்று (24) மாலை இடம்பெற்ற விபத்தில், இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
பலாலியில் இருந்து அச்சுவேலி நோக்கி வந்த இராணுவ கெப் வாகனமும் அச்சுவேலியில் இருந்து பலாலி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதுண்டே, இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் பணயித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தையடுத்து, இராணுவ வாகன சாரதி, அச்சுவேலி போக்குவரத்து காவல் துறையினர் கைதுசெய்யப்பட்டார்.

