நாளை (26) ஜாஎல மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு 18 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அத்தியவசிய திருத்த வேலைகள் காரணமாக இவ்வாறு நீர் வெட்ட அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் நாளை காலை 9 மணி முதல் நாளை மறுநாள் அதிகாலை 3 மணி வரையில் இவ்வாறு நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஜாஎல மற்றும் கட்டுநாயக்க நகர சபைக்கு உட்பட்ட பகுதி, ஜாஎல – ஏகல, கந்தான, ஆனியா கந்த, பட்டகம, துடெல்ல, நிவன்தம, மாலுஎலிய, கெரவலபிட்டிய, மாடாகொட, வெலிசர, மாபோல, எலபிட்டிவல, மஹபாகே, திக்ஓவிட்ட, உஸ்வெட்டகெய்யாவ, பமுனுகம மற்றும் போபிட்டிய ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

