கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வெளிநாட்டு சிகரட் ஒரு தொகையுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (24) இரவு குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் 10,200 சிகரட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

