ஶ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன சந்தானயவின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

349 0
ஶ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன சந்தானயவின் மத்திய செயற்குழு கூட்டம் மற்றும் கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று (25) இடம்பெறவுள்ளது.

இன்று மாலை நெலும் மாவத்தையில் உள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன சந்தானயவின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அதன் தவிசாளர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியவர்களின் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் இதன்போது விஷேட கவனம் செலுத்தப்படவுள்ளது.