தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மாத்தறை முதல் பரவகும்புக வரையிலான பகுதி இன்று (24) நள்ளிரவு முதல் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் கட்டுநாயக்க முதல் மத்தளை வரையான தெற்கு அதிவேக நெடுஞ்சாலை முழுமையாக திறக்கப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பு முதல் ஹம்பாந்தோட்டை வரையான பொதுப் போக்குவரத்து சேவைகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாளை காலை 8.30 மணிக்கு முதலாவது பேருந்து ஹம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ளது.
அதனடிப்படையில் ஹமந்தோட்டையில் இருந்து கொழும்பிற்கு 880 ரூபாவும், தங்கல்லையில் இருந்து கொழும்பிற்கு 680 ரூபாவும் கட்டணமாக அறவிடப்படும்.
தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை – ஹம்பாந்தோட்டை இடையிலான பகுதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் பொதுமக்களிடம் நேற்று கையளிக்கப்பட்டது.
இந்தப் பகுதி இலங்கையில் இதுவரை அமைக்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் சுற்றுச் சூழலுக்கு ஏற்ப உயர்ந்த தரத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிவேக வீதியாகும்.
மாத்தறை – ஹம்பாந்தோட்டைக்கு இடையிலாக அமைக்கப்படும் இந்த வீதிக்காக 16 ஆயிரத்து 870 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

