ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இரண்டு பேர் கைது

308 0
மாத்தறை, தெவிநுவர பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தறை ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, சந்தேகநபரான பெண்ணிடம் இருந்து 55 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மற்றும் மற்றைய சந்தேகநபரிடம் இருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

34 வயதுடைய பெண் முல்லைத்தீவு பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படும் நிலையில், மற்றைய சந்தேகநபர் தெவிநுவர வாவ்வ பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் இன்றைய தினம் மாத்தறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.