சின்னம் தொடர்பான முரண்பாட்டிற்கு ஓரிரு தினங்களில் தீர்வு கிடைக்கும்- விஜேபால

327 0

எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியின் பொதுத்தேர்தல் சின்னம் தொடர்பான முரண்பாட்டிற்கு ஓரிரு தினங்களில் தீர்வு கிடைக்கப்பெறுமென நாடாளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எமது கட்சிக்குள் காணப்பட்ட  அனைத்து  முரண்பாடுகளுக்கும்  தீர்வு காணப்பட்டுள்ளது. இருப்பினும் சின்னம் தொடர்பாக  முரண்பாடு காணப்படுகின்றது.

இந்நிலையில் அன்னம் சின்னத்திற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்த நிலையிலும் கூட சட்டச்  சிக்கல் காணப்பட்டது. எனவே, நாம் யானை சின்னத்தில் போட்டியிடுவதற்கு  தயாராகவுள்ளோம்

சஜித் பிரேமதாசவினுடைய தந்தை ஐ.தே.கவிற்காவில் இருந்தே உயிர் த்தியாகம் செய்தவர். ஆகவே, அவருடைய புதல்வருக்கும் யானை  சின்னத்தில் உரிமை உண்டு.

எனினும் யானை சின்னத்திலும் ஏதேனும் சட்டச்சிக்கல்கள், முரண்பாடுகள் காணப்படின் வேறு சின்னத்தில் போட்டியிடுவது  தொடர்பாக கவனம் செலுத்துவோம்.

அந்தவகையில் இந்த சின்னம் தொடர்பான பிரச்சினைக்கு ஓரிரு  தினங்களுக்குள் தீர்வு எட்டப்படும்” என குறிப்பிட்டுள்ளார்