ஒருநாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பப்படிவங்களை ஒப்படைத்து, 04 மணிநேரத்திற்குள் அடையாள அட்டைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒருநாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகளுக்கு அவர்களது தேசிய அடையாள அட்டைகள் தயாரானதும் விண்ணப்பதாரியின் கையடயக்கத் தொலைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய விண்ணப்பப்படிவங்களை ஒப்படைத்த பின்னர் திணைக்கள வளாகத்தில் தங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒருநாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்காக நாளொன்றுக்கு ஆயிரத்து 500 பேருக்கும் அதிகமானோர் கொழும்பு அலுவலகத்திற்கு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

