ரோஹிதவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

287 0

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் 24 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிரான வழக்கு விசாரணை, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போது, அரசு தரப்பு சார்பாக சாட்சிகள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன. அதனை ஆராய்ந்த நீதிபதி விசாரணையை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.

2004 முதல் 2006 வரை 41.2 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாக அபேகுணவர்தன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.