ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையில் உருவாக்கப்பட்ட புதிய கூட்டணி மொட்டு சின்னத்தின் கீழ் போட்டியிடும் என்று இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (சனிக்கிழமை) கண்டியில் இடமபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல்வேறு கருத்துக்களை தெரிவித்துவந்தாலும் புதிய கூட்டணி பொதுஜன பெரமுனவின் தலைமையில் இருக்கும் என கூறினார்.
அதன்படி எதிர்காலத்தில் சுதந்திரக் கட்சியின் எந்தவொரு உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைத்துக்கொள்ளலாம் என்றும் அதற்கு எந்த கட்டுப்பாடுகள் இல்லை எனவும் இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் புதிய கூட்டணி தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவுக்கும் இடையில் நாளை மறுதினம் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

