எந்த சின்னத்தில் களமிறங்கினாலும் ஐ.தே.க.வை மக்கள் நிராகரிப்பார்கள்- கெஹலிய

313 0

பொதுத்தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் ஐ.தே.க.வை மக்கள் நிச்சயம் நிராகரிப்பார்களென  அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஐக்கிய தேசியக்கட்சி எமக்கு கடந்த வருடத்தில் மட்டுமல்ல இனிவரும் காலங்களிலும் சவால்மிக்க கட்சியாக ஒருபோதும் இருக்காது.

நல்லாட்சி அரசாங்கத்தின் 5 வருட ஆட்சியானது  மிகவும் பலவீனமான முறையிலேயே காணப்பட்டது.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைகின்ற அனைத்து தரப்பினருடைய ஆட்சியும் பலவீனமாகியுள்ளதை தற்போது அவதானிக்க கூடியதாக உள்ளது.

இதேவேளை ஐ.தே.க.வுக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியினை அவர்களே தீர்த்துக்கொள்வார்கள். எமக்கு மக்களுடன்தான் கொடுக்கல் வாங்கல் உள்ளது.

அந்தவகையில் குறித்த கட்சி, எந்த சின்னத்தில் களமிறங்கினாலும் மக்கள் நிச்சயம் நிராகரிப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.