ஆம் ஆத்மி கட்சியில் ஒரே நாளில் 11 லட்சம் பேர் இணைந்தனர்

79 0

தேர்தல் முடிந்து வெற்றி நிலவரங்கள் அறிவிக்கப்பட்ட ஒரே நாளில் ஆம் ஆத்மி கட்சியில் 11 லட்சம் பேர் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் அனைவரும் ‘மிஸ்டு கால்’ மூலம் தங்கள் இணைப்பை உறுதி செய்துள்ளனர்.டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம் டெல்லியில் தொடர்ந்து 3-வது முறையாக அக்கட்சி ஆட்சி அமைக்கிறது.

இந்த நிலையில் தேர்தல் முடிந்து வெற்றி நிலவரங்கள் அறிவிக்கப்பட்ட ஒரே நாளில் ஆம் ஆத்மி கட்சியில் 11 லட்சம் பேர் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் அனைவரும் ‘மிஸ்டு கால்’ மூலம் தங்கள் இணைப்பை உறுதி செய்துள்ளனர்.

இதை உறுதிபடுத்தும் விதமாக டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வெற்றி நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு ஒரு நாள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், அமோக வெற்றியைப் பார்த்து 11 லட்சம் மக்கள் நமது கட்சியில் இணைந்துள்ளனர். இது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஆம் ஆத்மி கட்சியை நாடு முழுவதும் வலுப்பெறச் செய்யும் விதமாக ராஷ்டிர நிர்மான் என்ற பிரசாரத்தை அந்த கட்சி தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.