‘சமகி ஜனபல வேகய’ பொதுத் தேர்தலில் போட்டியிடவது குறித்த இறுதி தீர்மானம் இன்று!

278 0

´சமகி ஜனபல வேகய´ எனப்படும் ஒற்றுமையின் சக்தி என்ற கூட்டணியில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவது குறித்த இறுதி தீர்மானம் இன்று எட்டப்படவுள்ளது.

இது குறித்து கலந்துரையாட எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (14) ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

புதிய கூட்டணி தொடர்பில் இணக்கப்பாட்டை பெற்றுக்கொள்வதற்காகவே இந்த கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ´சமகி ஜனபல வேகய´ என்ற கூட்டணியை உருவாக்கி அதன் சின்னமாக இதயத்தை பெயரிட்டிருந்தாலும் அதற்கு ஐ.தே.க செயற்குழுவில் உள்ள பெரும்பலான உறுப்பினர்கள் இணங்வில்லை.

அவர்கள் யானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என தெரிவித்திருந்த நிலையில் கடந்த 12 ஆம் திகதி கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் எதிர்க் கட்சித் தலைவர் இது குறித்து கலந்துரையாடினார்.

அந்த கலந்துரையாடலில் எதிர்க் கட்சித் தலைவர், கபீர் ஹசீம், ரஜ்ஜித் மத்தும பண்டார உள்ளிட்டவர்கள் பங்கேற்றதுடன் அவர்கள் புதிய கூட்டணியின் சின்னமான யானை சின்னத்தை பெயரிட ரணில் விக்ரமசிங்கவிடம் அனுமதி கோரிய போதிலும் அதற்கு அவர் இணங்கவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னமான யானை சின்னத்தில் போட்டியிடுமாறும் கூட்டணியின் பொதுச் செயளாலர்களாக ஜோன் அமரதுங்க அல்லது தயா பெல்பொல ஆகிய இருவரில் ஒருவரை நியமிக்க கூடிய இயலுமை உள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த தீர்க்கமான நிலைமை தொடர்பில் ரணில் மற்றும் சஜித் தரப்பினர் தனித்னியாக ஊடக சந்திப்புகளை நடத்தி தத்தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலைமையிலேயே ´சமகி ஜனபலவேகய´ எனப்படும் ஒற்றுமையின் சக்தி என்ற கூட்டணியில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவது குறித்த இறுதி தீர்மானத்தை எடுக்க சஜித் பிரேமதாச இன்று (14) ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.