உதயங்க வீரதுங்க இலங்கை வருகை!

33 0

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இலங்கை வருகை தந்துள்ளார்.

அவர் இன்று (14) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உதயங்க வீரதுங்க இன்று அதிகாலை 4.37 அளவில் மஸ்கட்டிலிருந்து இலங்கைக்கு வருகைதந்த யு.எல் – 208 என்ற இலக்கமுடைய விமானத்தின் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளார்.