பத்திரிகையாளர் தரிசா பஸ்டியனை இலக்குவைக்குகின்றதா அரசாங்கம்?

195 0

இலங்கையின் தூதரகமொன்றில் பணிபுரியும் வெளிநாட்டு சேவையை சேர்ந்த ;அதிகாரியொருவரை உடனடியாக இலங்கைக்கு திரும்புமாறு வெளிவிவகார அமைச்சு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சண்டே ஒப்சேவரின் முன்னாள் ஆசிரியர் தரிஸ்டா பஸ்டியனின் கணவரான வெளிநாட்டு சேவை உத்தியோகத்தர் ஜிகான் இந்திரகுப்தவே இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகம் விடுத்த அழுத்தங்களின் காரணமாகவே வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்ட உத்தியோகத்தரை இலங்கைக்கு அழைத்துள்ளது.

ராஜபக்ச அரசாங்கங்களினை கடுமையாக விமர்சிக்கும்; பத்திரிகையாளர் தரிசா பஸ்டியனை சுவிஸ் தூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்ட விவகாரத்துடன் தொடர்புபடுத்தி சி.ஐ.டியினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையிலேயே அவரது கணவரை நாடு திரும்புமாறு வெளிவிவகார அமைச்சு அழைத்துள்ளது.

டிசம்பர் 16 தேர்தலிற்கு பின்னர் தரிசா பஸ்டியன் நாட்டிலிருந்து தப்பிவெளியேறியுள்ளார். இதேவேளை கோத்தாபய ராஜபக்ச அரசாங்கம் தன்னை விமர்சிப்பவர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது என கொழும்பு டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது.

நியுயோர்க் டைம்சில் தற்போது பணிபுரியும் தரிசா பஸ்டியனெ சுவிஸ் தூதரக பணியாளர் தொடர்பான செய்தியை அம்பலப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் கடந்த காலங்களில் ராஜபக்ச சகோதரர்களை கடுமையாக விமர்சித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பத்திரிகையாளர் தரிசா பஸ்டியனும் அவரது கணவரும் நாடு திரும்பியவுடன் விமானநிலையத்தில் வைத்து அவர்களை கைதுசெய்து தடுத்து வைக்குமாறு சிஐடியினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கொழும்பு டெலிகிராவ் குறிப்பிட்டுள்ளது.