அபிவிருத்தி லொத்தர் சபைக்கு புதிய தலைவர் நியமனம்

201 0

இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான ஓய்வுபெற்ற பீ.விஜேவீர அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையின் அதிகாரியாக நியமனம் பெற்று தமது தொழில்முறை வாழ்வை ஆரம்பித்த ஜயத் பீ விஜேவீர 35 வருடங்கள் அரச நிர்வாக சேவை தொடர்பில் அனுபவம் பெற்ற நபராகும்.

தனது தொழில்முறை வாழ்வினுள் பல அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் பதவி வகித்துள்ள ஜகத் பாதுகாப்பு அமைச்சில் மேலதிக செயலாளராக பணியாற்றியுள்ளார்.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளராக பணியாற்றியுள்ள ஜகத், இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.