சட்டமா அதிபரால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு மற்றுமொரு அறிவிப்பு

220 0

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு நீதிமன்ற செயற்பாடுகள் மற்றும் விசாரணை நடவடிக்கைகளை ரத்துச் செய்ய அதிகாரம் இல்லை என சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.

பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன கோரியிருந்த சட்ட ஆலோசனைக்கு பதிலளித்து சட்டமா அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.

நீதிமன்றில் நிலவும் சட்ட நடவடிக்கைகளை நீதிமன்றத்தால் மாத்திரமே ரத்துச் செய்ய முடியும் என சட்டமா அதிபர் அதனூடாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் ஊழல் விசாரணை குழு செயலாளர் அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய குற்றவியல் விசாரணை திணைக்களம், பொலிஸ் நிதி குற்றப் பிரிவு, விசேட விசாரணை பிரிவால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் குறித்த முறைப்பாடுகளை பெற்றுத்தருமாறு அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபர் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் அனைத்து விசாரணை நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற செயற்பாடுகளுக்காக தடையுத்தரவை வௌியிடுவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இல்லை என கடிதம் மூலம் சட்டமா அதிபர் இதனை அறிவித்துள்ளார்.