ஐஸ் போதைப்பொருள் தொகையுடன் நபரொருவர் கைது

319 0
மத்திய தபால் பரிமாற்ற நிலையத்தில் ஐஸ் போதைப்பொருள் தொகையுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மெக்சிகோவில் இருந்து இந்நாட்டுக்கு அனுப்பப்பட்ட பொதி ஒன்றை பொறுப்போட்க வந்த நபரொருவரையும் குறித்த பொதியையும் சோதனைக்கு உட்படுத்திய போது குறித்த ஜஸ் போதைபொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, குறித்த பொதியில் இருந்து 502 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

29 வயதுடைய பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (11) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ள நிலையில், பொலிஸ் போதைப்பொருள் பணியகம் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.