2020 ஆம் ஆண்டு டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் ஆண்டாக பிரகடனம்

286 0
2020 ஆம் ஆண்டை டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் ஆண்டாக இலங்கை மத்திய வங்கி பிரகடனப்படுத்தியுள்ளது.

அங்கீகாரம் பெற்ற வணிக வங்கிகள் உள்ளிட்ட ஏனைய நிதி நிறுவனங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் டிஜிட்டல் முறையிலான கொடுக்கல் வாங்கல்களுக்கு மக்களை பழக்கப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

கையடக்க தொலைபேசியூடாக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் முறைமையை ஊக்குவித்தல் இதன் ஊடாக எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோல் தொழினுட்ப ரீதியாக இலங்கையை முன்நோக்கி கொண்டு செல்வதும் இதன் நோக்கமாகும்.

இதற்காக இலங்கை மத்திய வங்கி கொடுக்கல் வாங்கல் பிரிவு மற்றும் அறவீட்டு பிரிவு ஆகியன பல்வேறு உபாய முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.