மட்டக்களப்பில் போதைப் பொருட்களுடன் ஒருவர் கைது

60 0

 

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் 50 கிராம் கேரள கஞ்சா மற்றும் 20 கிராம் 75 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் கஞ்சா வியாபாரி ஒருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை (09) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான புலனாய்வு பிரிவினர் சம்பவ தினமான (09) இன்று மாலை வாழைச்சேனை சி.பி. வீதியில் உள்ள குறித்த கஞ்சா வியாபாரியின் வீட்டை சுற்றி வழைத்து தேடுதலில் ஈடுபட்டனர்.

இதன்போது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 கிராம் கேரள கஞ்சா மற்றும் 20 கிராம் 75 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பெருளை மீட்டதுடன் கஞ்சா வியாபாரியை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .

இதில் கைது செய்யப்பட்டவர் 41 வயதுடையவர் எனவும் நீண்டகாலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளார் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்