கொரோனா வைரஸ் 9 நாட்கள் உயிரோடு இருக்கும்- ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

356 0

சீனாவில் சுமார் 800-க்கும் மேற்பட்டோரை பலி வாங்கி இருக்கும் கொரோனா வைரஸ் 9 நாட்கள் வரை உயிரோடு இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து உள்ளனர்.

ஹாஸ்பிட்டல் இன் பெக்சன் இதழில் கொரோனா வைரஸ் பற்றிய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் ஆய்வு மைய பேராசிரியர் கண்டர்கம்ப் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் சராசரியாக 4 முதல் 5 நாட்கள் வரை உயிரோடு இருக்கும். குறைந்த வெப்ப நிலை, காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதம் ஆகியவை கொரோனா வைரசின் வாழ்நாளை அதிகரிக்கும். காற்றிலோ, தரையிலோ கூட 9 நாட்கள் வரை உயிரோடு இருக்கும்.

இதுவரை இந்த வைரஸ் தொற்றுக்கு என்று பிரத்தியேக சிகிச்சை முறை எதுவும் கண்டறியப்படவில்லை. தற்போதைக்கு இந்த வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்வதே முக்கியமான தாகும்.

இந்த வைரஸ்கைகள் வழியாகவும், காற்று மற்றும் அடிக்கடி தொடும் பொருட்களில் இருந்தும் பரவக்கூடும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.