அதிகாரிகள் மீது பழிவாங்கல் நடவடிக்கை

289 0

 

மாவட்ட செயலர்கள் மீது பாய்ந்த அரசியல் பழிவாங் கல் நடவடிக்கை மீண்டும் 9 மாகாணங்களினதும் பிரதம செயலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது பாயவு ள்ளது.

இலங்கையில் ஏப்பிரல் மாதம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்து அரச நிர்வாக இயந்திரங்களில் ஆளும் கட்சி விசுவாசிகள் உயர் பதவிகளில் மாவட்டங்களில் உள்ள ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் சிபார்சினை மட்டுமே தகுதியாக கொண்டு நியமிக்கப்படுகின்றனர். இதற்கு உதாரணமாக ஊழல் மோசடி ஒன்றில் தொடர்பு பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு அதிகாரியின் கோவை அவசர அவசரமாக முடிவுறுத்தப்பட்டு மாவட்டச் செயலாளராக பரிந்துரைக்கப்பட்டார்.

இதேபோன்று 1991ஆம் ஆண்டு நிர்வாக சேவையில் இணைந்துகொண்ட வடக்கினைச் சேர்ந்த 11 அதிகாரிகள் மாவட்டச் செயலாளர் பதவிக்காக விண்ணப்பித்தபோதும்98ஆம் ஆண்டு நிர்வாக சேவைக்குள் நுழைந்த இளைய அதிகாரி ஒருவர் ஆளும் கட்சி விசுவாசத்தினால் வடக்கில் மாவட்டச் செயலாளராக வந்துள்ளார்.

இந்நிலமை மாவட்டச் செயலாளர் நியமனத்தில் மட்டுமன்றி மாவட்ட மேலதிக செயலாளர் நியமனத்திலும் உள்ளூர் அரசியல்வாதியின் விசுவாசப் பட்டியலே நீள்கின்றது.மாவட்டச் செயலாளர்கள் பதவியில் இவ்வளவு குளறுபடிகள் என்றால் அடுத்தபடியாக தற்போது மாகாணத்தின் பிரதம செயலாளர்கள் இலக்கு வைக்கப்பட்டு 9 மாகாணங்களின் பிரதம செயலாளர்களையும் கூண்டோடு மாற்றும் பட்டியல் தயார் செய்யப்படுகின்றது.

இதற்கமைய கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களின் பிரதம செயலாளர்கள் புதிய அரசின் காலத்தில் மாற்றம் செய்யப்பட்டு விட்டதனால் எஞ்சிய 7 மாகாணங்களின் பிரதம செயலாளர்களும் விரைவில் தூக்கப்படவுள்ளனர். இதற்கான பட்டியல் ஒன்றும் தயார் செய்யப்பட்டு சிறிலங்கா ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்ததும் பிரதம செயலாளர்களின் இடமாற்றமும் தேர்தலிற்கு முன்பு இடம்பெறவுள்ளது.