பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு கொரொனா இல்லைனெ கண்டறியப்பட்டுள்ளது

300 0

 

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவித்து பதுளை போதனா அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவியின் விசேட வைத்திய பரிசோதனைகள் பலவற்றிலும் அம் மாணவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் உயர்கல்வியை மேற்கொண்டு வந்த இம் மாணவி நாடு திரும்பி தமது சொந்த ஊரான மொனராகலையை சென்றடைந்தார். இதையடுத்து அவருக்கு ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் நோய் அறிகுறிகள் தென்பட்டதினால் அவர் மொனராகலை அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அத்தோடு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டப் போதிலும் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவித்த வைத்தியர்கள் அவரை பதுளை போதனா அரசினர் வைத்தியசாலைக்கு கடந்த 5ந் திகதி மாற்றப்பட்டிருந்தார்.

அதையடுத்து அவருக்கு பாதுகாப்பு சீருடைகள் அணிவிக்கப்பட்டு, தனி அறையில் ஏனைய நோயாளர்களுக்கு புறம்பாக தனிமையாக்கப்பட்டு அதி விசேட பரிசோதனைகளும், சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்தன.

இவரின் இரத்த மாதிரிகள் பொரளை வைத்திய பரிசோதனை ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பப்பட்டதுடன் மேலும் பல பரிசோதனைகளும் இடம்பெற்றன.

இப் பரிசோதனைகள் அனைத்திலும் அம் மாணவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லையென்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது அம் மாணவி ஏனைய நோயாளர்களுக்கு போன்று சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றதென்றும் , ஏற்பட்டிருந்த பதட்டமும், பீதியும் அகற்றப்பட்டு விட்டதாகவும் பதுளை போதனா அரசினர் வைத்தியசாலையின் வைத்தியர் பாலித்த ராஜபக்ச தெரிவித்தார்.

குறிப்பிட்ட இம் மாணவிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது குறித்த விடயம் அறியப்பட்டதும் பதுளை போதனா அரசினர் வைத்தியசாலையில் பெரும் பதட்டமும் பீதியும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.