அரசியல் பழிவாங்கல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்!

312 0

நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்கல்களின் ஊடாக பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.

இன்று(வியாழக்கிழமை) முதல் இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2015 ஜனவரி 8ஆம் திகதி முதல், 2019 நவம்பர் 16 வரையிலான காலப்பகுதியில், பதவிகளை வகித்த அரச உத்தியோகத்தர்கள், அரச கூட்டுத்தாபன ஊழியர்கள், ஆயுதப் படை மற்றும் காவல்துறை உறுப்பினர்களுக்கு இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் அரசியல் ரீதியான பழிவாங்கல்கள் தொடர்பாக இந்த ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது.

அரசியல் பழிவாங்கல்களின் ஊடாக பாதிக்கப்பட்டவர்கள், செல்லுபடியான சத்தியக்கடதாசி ஊடாக தமது முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என கூறப்படுகின்றது.