தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி

527 0
தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி நாடுகள் வாரியாக கடந்த  பத்தாண்டுகளாக பல அறவழியில் போராட்டங்கள் நடந்து கொண்டிக்கும் இவ்வேளையில் தொடர்ச்சியாக எம் இருப்பை தக்க வைத்துக்கொள்ளவும் உலகின் மறக்கப் பட்ட மனித நேயம் சொற்பம் ஏனும் மீதமிருக்குமாயின் தமிழர்களுக்கு என நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுக்கும் கடப்பாடு இருக்கின்றது. அந்த வகையில்  24.02.2020 அன்று பி.ப 2 மணியளவில் Belgium , Brussels அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் முன் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற இருக்கின்றது.
அக்கவனயீர்ப்பு போராட்டத்தின்  பின் BELGIUM , LUXEMBOURG , GERMANY , FRANCE ஆகிய நாடுகளை ஊடறுத்து  மனித நேய  போராளிகளினால் நீதிக்கான மிதிவண்டிப் பயணம் ஆரம்பமாக இருக்கின்றது. இப்பயணமானது தான் வரும் வழிகளில் எல்லாம் அரசியற் பிரமுகர்கள், நகரபிதாக்கள், ஊடகங்கள், பன்னாட்டு வாழ் மக்கள் என அனைவரிடத்திலும்
எமது தமிழீழ மண் மீட்பின் நியாயப்பாட்டினையும் 
அரசியற் கைதிகளின் உடனடி விடுதலை
நில அபகரிப்பு
இராணுவமயமாக்கல், சிங்களமயாக்கலின் வீரியம்
சுதந்திர தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு
தமிழின அழிப்பிற்கான நீதி
காணமால் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே
எனும் கேள்விக்கு பொறுப்பற்ற பதிலினை கூறிக்கொண்டு அலட்சியப் படுத்தும் வக்கிர சிறிலங்கா அரசின் பதிலைக் கண்டித்தும், ..
மற்றும் பல அம்ச  கோரிக்கைகளை  முன்வைத்து 10 ஆண்டுகள் கழிந்தும் தமிழர்கள் திட்டமிட்டே  சமநீதியின் முன் புறக்கணிக்கப் படுகின்றார்கள் என்பதனையும் ஓங்கி வலியுறுத்திக் கொண்டு நீதிக்கான மனித நேய ஈருருளிப்பயணம்  09.03.2020 அன்று Geneva , SWITZERLAND  ல் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்  ஐ.நாவின் செவிப்பறைகள் முழங்கி மனச்சாட்சியினை உலுப்பும் விதமாக பிற்பகல் 2:00 மணியளவில்  நடைபெற இருக்கும் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொள்ள இருக்கின்றது.
எனவே அனைத்து ஐரோப்பிய வாழ் உறவுகளையும் தங்கள் வரலாற்றுக் கடமையினை ஆற்ற திரண்டு வந்து பன்மை சேர்த்து நிற்குமாறு உரிமையோடு வேண்டுகின்றோம். ஒவ்வொரு நாடுகளிலும் போக்குவரத்து  வசதிகள் அந்த அந்த நாட்டு தமிழர் ஒருங்கிணைப்பு குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த வேளையில் விரைவாக உங்கள் வாழிட நாட்டு பொறுப்பாளரினை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளுங்கள்.
 இப்படியான அறவழிப் போராட்டச் சந்தர்ப்பத்தை தவறவிடுவோமேயானால் என்றும் எம் இனம் எழாதே மாண்டுவிடும். எனவே வாரீர் எமக்காக நாமே போராட வாரீர். .
“போராட்ட வடிவங்கள் மாறலாம், நாம் கொண்ட இலட்சிய நோக்கம் என்றும் மாறப் போவதில்லை” -தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
நன்றி,
தமிழர் ஒருங்கிணைப்பு குழு- பெல்சியம் கிளை.