தங்களது பணத்தை மகளும் மருமகனும் களவாடியதாக காவல்துறையை நாடிய பெற்றோர்

244 0

தனது தாய் மற்றும் தந்தை ஆகிய இரு­வ­ரி­னது வங்கிக் கணக்­கு­க­ளி­லி­ருந்து வங்கி அட்­டை­யினைப் பயன்­ப­டுத்தி 5 இலட்சம் ரூபாய் பணத்தை மோச­டி­யாகப் பெற்­றுள்­ள­துடன், தாயி­ட­மி­ருந்த சுமார் 5 இலட்­சத்­திற்கும் அதிக பெறு­ம­தி­யு­டைய தங்கச் சங்­கி­லி­யையும் கொள்ளை­யிட்டு அடகு வைத்­து­விட்டு தாயையும், தந்­தை­யையும் வீட்டை விட்டு வெளி­யேற்­றிய மக­ளையும் மரு­ம­க­னையும் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை கைது செய்­துள்­ள­தாக சிலாபம் பொலிஸார் தெரி­வித்­தனர்.

சிலாபம் மைக்­குளம் பிர­தே­சத்­தி­லேயே இச்­சம்­பவம் இடம்பெற்றுள்ளது.

பாதிக்­கப்­பட்ட தாயும் தந்­தையும் சிலாபம் பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்­டுக்கு அமைய அவர்கள் மொன­ரா­கலை பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வர்கள் என்றும், சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் தமது மகளை சிலாபம் மைக்­குளம் பிர­தே­சத்தைச் சேர்ந்த கைது செய்­யப்­பட்­டுள்ள நப­ருக்கு திரு­மணம் முடித்து கொடுத்து அவர்கள் சிலா­பத்­தி­லேயே வசித்து வந்­துள்­ள­தோடு திரு­ம­ணத்தின் பின்னர் சிலாபம் பிர­தே­சத்­திற்கே வந்து தம்­மோடு இருக்­கு­மாறும், காணி ஒன்றை வாங்கி வீடொன்றை நிர்­மா­ணித்துக் கொள்ள முடியும் என்றும் மகளும், மரு­ம­கனும் தம்மை அழைத்­ததால் தாமும் அதற்கு விருப்பம் தெரி­வித்­த­தா­கவும் அந்த முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பின்னர் மொன­ரா­கலை பிர­தே­சத்தில் தமது வீட்டை 35 இலட்சம் ரூபா­வுக்கு விற்­று­விட்டு சிலா­பத்­திற்கு தமது மகள் மரு­ம­க­னுடன் வாழ வந்­துள்­ள­தோடு, வீடு விற்ற பணத்தை சிலாபம் நக­ரி­லுள்ள அரச மற்றும் தனியார் வங்­கிகள் மூன்றில் வைப்புச் செய்­துள்­ளனர். பின்னர் சிலாபம் நகரில் தனியார் நிறு­வனம் ஒன்றில் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­த­ரா­கவும் தந்தை பணியில் இணைந்­துள்ளார்.

இவ்­வா­றான நிலையில் சில நாட்­க­ளுக்குப் பின்னர் மரு­மகன் தனது மனை­வி­யிடம் தெரி­வித்த யோச­னைக்கு அமைய மகள் தனது தாயி­னது வங்கி அட்­டைகள் மற்றும் அவற்றின் இர­க­சிய இலக்­கங்­க­ளையும் பெற்றுக்கொண்டு அவற்றைப் பயன்­ப­டுத்தி அவ்­வப்­போது ஐந்து இலட்சம் ரூபாய் பணத்தை மோச­டி­யாகப் பெற்றுக் கொண்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதற்கு மேலாக தாயி­ட­மி­ருந்து சுமார் ஐந்து இலட்சம் ரூபா­வுக்கும் அதிக பெறு­ம­தி­யு­டைய தங்க சங்கிலியையும் எடுத்துச் சென்ற மகள் அதனை தனது கண­வ­ரிடம் கொடுத்து அடகு வைத்­துள்­ள­தா­கவும் அந்த முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தேவை ஒன்­றிற்­காக தாய் மக­ளிடம் தனது தங்க சங்கிலியைக் கேட்டபோது அதனை அவ­சரத் தேவைக்­காக அடகு வைத்­துள்­ள­தாக மகள் கூறி­யதை அடுத்து தனது மகள் மற்றும் மரு­மகன் மீது ஏற்­பட்ட சந்­தே­கத்தில் தாயும் தந்­தையும் தமது வங்கிக் கணக்கைப் பரீட்­சித்துப் பார்த்­துள்­ள­தோடு அவற்­றி­லி­ருந்து பணம் மீளப்­பெ­றப்­பட்­டி­ருப்­பதை அறிந்து கொண்­டுள்­ளனர்.

பின்னர் இது பற்றி கேட்­ட­போது அவர்­க­ளுக்­கி­டையில் பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ள­துடன் மகளும், மரு­ம­கனும் சேர்ந்து தாய்க்கும் தந்­தைக்கும் மரண அச்­சு­றுத்தல் விடுத்து அவர்­களை வீட்டை விட்டு வெளி­யே­று­மாறும் அச்­சு­றுத்­தி­யுள்­ளனர்.

இத­னை­ய­டுத்து அவர்கள் இரு­வரும் சிலாபம் பொலிஸ் நிலையம் சென்று பொலி­ஸாரின் தயவை நாடி­யுள்­ளனர். இந்த முறைப்­பாட்­டை­ய­டுத்து உடன் செயற்­பட்ட பொலிஸார் மகளையும், மருமகனையும் கைது செய்துள்ளதோடு அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

சிலாபம் பொலிஸ் நிலைய பொறுப் பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் செனரத் எதிரிசிங்க தலைமை யிலான குழுவினர் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.