கொழும்பிலிருந்து திருகோணமலைக்குப் பயணித்த சொகுசு பஸ்ஸொன்று பாதையை விட்டு விலகி, ஆற்றுக்குக்குள் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில், மூவர் பலத்த காயங்களுடன், கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து, கந்தளாய் 87 வளைவுப் பகுதியிலே இன்று (04) அதிகாலை இடம்பெற்றுள்ளதாகவும் 34, 56 மற்றும் 26 வயதுடைய மூவரே காயங்களுக்கு உள்ளாகியுள்ளனரெனவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கமே, இந்த விபத்துக்குப் பிரதான காரணமென ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து அறியமுடிகின்றதென, பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை, கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

