எதிர்வரும் 05 ஆம் திகதி சமன் ரத்னபிரிய பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரத்ன பதவி விலகியதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு சமன் ரத்னபிரிய சில்வாவை நியமிக்குமாறு, அக்கட்சியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடந்த தினம் அறிவித்தார்.
அதன்படி, குறித்த நியமனத்துடன் தொடர்புடைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தேர்தல் ஆணைளக்குழுவால் கடந்த ஜனவரி 27 ஆம் திகதி வௌியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

