கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்கு உட்பட கல்கிஸ்ஸ, சேரம் வீதி பிரதேசத்தில் அமைந்துள்ள இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட மோதலில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (03) அதிகாலை 4.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
31 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சடலம் கலுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

