பொத்துவில் நகரில் அமைந்துள்ள பழக்கடை ஒன்றில் தீ பரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் இன்று (03) அதிகாலை 3.53 அளவில் இடம்பெற்றுள்ளது.
பனாம கடற்படை தீயணைப்பு வாகனத்தை பயன்படுத்தி தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது இதற்கு பிரதேச மக்களும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.
தீ பரவலினால் எந்தவித உயிராபத்துகளும் ஏற்படாத நிலையில் சேதவிபரங்கள் இதுவரை கணக்கிடப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

