கொரோனா வைரஸ் தொற்றை காரணமாக கொண்டு அபிவிருத்தி பணிகளை நிறுத்த தேவையில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நாடு கொரோனா வைரஸ் தொற்று அற்ற நாடாக உறுதியான பின்னர் சுற்றுலாத் துறை மீண்டும் புத்துயிர் பெறும் என்று அமைச்சர் கூறினார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை ஜனாதிபதி கையாளும் முறையின் மூலம் தலைமைத்துவத்தின் பண்புகள் தெரியவருவதாக ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

