முச்சக்கரவண்டி விபத்தில் 16 வயது இளைஞன் பலி

305 0

கொழும்பு – கண்டி வீதியின் பேலியகொடை துடுகெமுனு மாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவன் உயரிழந்துள்ளான்.

பயணித்துக் கொண்டிருந்த லொறியொன்றின் பின்னால் முச்சக்கரவண்டியொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெல்லம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய இளைஞன் ஒருவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பேலியகொடை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.