சீனாவுக்கான ஜனாதிபதியின் விஜயம் கேள்விக்குறியாகியுள்ளது!

348 0

சீனாவை தற்போது அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவின் அந்நாட்டிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம் கேள்விக்குறியாகியுள்ளது.

இம் மாதம் இரண்டாவது வாரத்தில் மேற்கொள்ளப்படவிருந்த இந்த சீனாவிற்கான ஜனாதிபதியின் விஜயமானது நெருக்கடியான நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாகவும் பெரும்பாலும் ஒத்திவைக்கப்பட கூடிய வாய்ப்புகள் உள்ளதாக ஜனாதிபதி ஊடக பணிப்பாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.

அவ்வாறு இந்த விஜயம் ஒத்திவைக்கப்படும் பட்சத்தில், இது இரண்டாவது தடவையாக இடம்பெற்றுள்ளது.