யாழில் இராணுவத்தினர் மீது தாக்குதல் – சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை

341 0

யாழ். நாகா்கோவில் பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறி கைது செய்யப்பட்ட 8 இளைஞர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தை பொங்கல் தினத்தில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த 8 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

குறித்த விடயம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினரை நாகர்கோவில் பகுதிக்கு சென்று சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தான் இந்த வழக்கில் முன்னிலையாவதாக உறுதியளித்திருந்தார்.

இதற்கமைய இன்று (புதன்கிழமை) காலை பருத்துறை நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், 8 இளைஞர்களும் தலா 5 ஆயிரம் ரூபாய் காசுப்பிணை மற்றும் 1 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.