யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை, வித்தகபுரம் பகுதியில் போதைப்பொருளுடன் இரு பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வியாபாரத்துக்கு என எடுத்துவரப்பட்ட உயிர்க்கொல்லி ஹெரோயின் போதைப்பொருளை பக்கெட் செய்து கொண்டிருந்தபோதே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 5 கிராம் 6 மில்லிகிராம் அளவுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அதன் பெறுமதி சுமார் 3 இலட்சம் ரூபாயாகும் என தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் வித்தகபுரத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஆணும் 31 வயதுடைய பெண்ணும் கொழும்பு, மோதரையிலிருந்து சென்றிருந்த 31 வயதுடைய ஆணும் 25 வயதுடைய பெண்ணும் அடங்குகின்றனர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

