இலங்கை வரும் வௌிநாட்டவர்கள் தொடர்பில் தீவிர கண்காணிப்பு தேவை- ஹரித அளுத்கே

325 0

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு மேலதிகமாக வௌிநாட்டவர்கள் இந்நாட்டுக்கு வருகை தரும் வேறு வழிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே இதனை தெரிவித்தார்.

நாட்டில் அமைந்துள்ள வேறு விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் ஊடாக இலங்கைக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை தருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.