75 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி- இருவர் படுகாயம்!

295 0

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் கேரளினா பகுதியில் வீதியை விட்டு விலகி முச்சக்கர வண்டி ஒன்று 75 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவர் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று (26) அதிகாலை 03.00 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து டயகம பகுதியை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் முச்சக்கர வண்டியின் சாரதிக்கு நித்திரை ஏற்பட்ட காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த 2 பேரில் ஒருவர் நாவலபிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.