பொல்கஹவெல ரயில் நிலையத்தை அண்மித்த பகுதியில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த கடுகதி ரயில் மோதுண்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளான்.
18 வயதான பம்பரகஸ்வெவ பகுதியை சேர்ந்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
சடலம் குருணாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொல்கஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

